வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (09:51 IST)

சென்னை-திருச்சி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் மாற்றம்..!

tejas
சென்னை - மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை - திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை - திருச்சி தேஜாஸ் ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன், திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றதை அடுத்து அதனை அங்கிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதனை அடுத்து தாம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை - திருச்சி தேஜஸ் ரயில் தாம்பரத்தில் இரண்டு நிமிடங்கள் மட்டும் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மீண்டும் தேஜஸ் ரயிலை சென்னை - மதுரை வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva