1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

பட்ஜெட் தினத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்!

gold
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 22 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5360.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 176 உயர்ந்து ரூபாய் 42880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5722.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45776.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்! வீடியோ வெளியானதால் பரபரப்பு!