வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (09:36 IST)

டிரைவருக்கு பதிலாக பஸ் ஓட்டும் கண்டக்டர்கள்? – போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!

Bus
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளை உரிய ஓட்டுனர்களை தவிர யாராவது இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் பல வழித்தடங்களில் பயணிகள் வசதிக்கு ஏற்ப இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் முறையாக நியமிக்கப்பட்ட ஓட்டுனர்கள் மட்டுமே இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபமாக சில வழித்தடங்களில் ஓட்டுனருக்கு பதிலாக நடத்துனர் பேருந்தை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “மத்திய பணிமணையில் கடந்த 28.01.2023 அன்று நடத்துனர் ஒருவர் ஓட்டுனருக்கு பதிலாக பேருந்தினை இயக்கி டீசல் பங்கினை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இது சில இடங்களில் நடத்துனர்கள் பேருந்தை இயக்குவதாக வெளியாகும் புகார்களை உறுதி செய்கிறது.

எந்த சூழ்நிலையிலும் ஓட்டுனரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமணை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்கக் கூடாது. இதை அனைவரும் அறியும் வகையில் பணிமணை உள்ளிட்ட இடங்களில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K