வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:55 IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைகல்விக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை  நிலைகல்விக்கான  செமஸ்டர் தேர்வுகள் கடந்தாண்டு  நடைபெற்றது.

இத்தேர்வை   நூற்றுக்கணக்கான  மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வியில்  இளநிலை, முது நிலை, மற்றும் எம்.பி.ஏ ஆகிய படிப்பிற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு டிசம்பரில் நடந்த இத்தேர்வு முடிவுகளை அறிய http://www.idenom.in/  என்ற இணைய முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம் எனத் தகவல் வெளியாகிறது.