திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:56 IST)

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து வருவதை அடுத்து 11 மாவட்டங்களில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை குறித்த மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த   நிலையில்,  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை,  புதுக்கோட்டை, ராம நாதபுரம், நெல்லை, தெங்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.