வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (17:09 IST)

எடப்பாடி பழனிசாமி தரப்பின் முக்கிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Edappadi
சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்கல் செய்த முக்கியமான தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை ஹை கோர்ட்டில் முறையீட்டும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் ஆதரவாளர் செம்மலை தாக்கல் செய்தார் 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மேல்முறையீட்டு மனுவுக்கான உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தாத சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்ய கூறி மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது 
 
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சசிகலாவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran