1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Opens on a High Note: Sensex Jumps 485 Points, Nifty Up 148 Points

மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் உயர்வு..!

பங்குச்சந்தை ஏற்றம்
பங்குச்சந்தை கடந்த வாரம் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 485 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 698 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 942 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டிகோ, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்கை, டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
மீண்டும் சரிந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!