1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
  4. Gold Rush in Reverse: Public Sells 50,000 Kgs of Old Gold in 3 Months Fearing Price Crash

அவசர அவசரமாக தங்கத்தை விற்கும் பொதுமக்கள்.. 3 மாதங்களில் 50000 கிலோ விற்பனையா?

தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், விலை மேலும் குறையும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்களின் நகைகளை அவசரமாக விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த விலை வீழ்ச்சி பயம் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பொதுமக்கள் தங்களிடமிருந்த சுமார் 50,000 கிலோ பழைய தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதத்திற்கும் மேல் அதிகம் என்று தங்கம் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 
நாளுக்கு நாள் தங்கம் விலை சரிந்து வந்த சூழலில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.150 உயர்ந்து 13,400 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.107,200 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
 
மறுபுறம் வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.250 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000 என்றும் சந்தையில் விற்பனையாகி வருகிறது. விலை வீழ்ச்சிக்கு அஞ்சி பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை விற்ற நிகழ்வு சந்தை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திரிஷா வச்சிருக்கும் நாய் பற்றிய ரகசியம்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே விஷ்ணு விஷால்!...