தொடர்புடைய செய்திகள்
- வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! – முற்றும் முதல்வர் – மய்யத்தார் மோதல்!
- இன்று கனமழை பெய்யும் 7 மாவட்டங்கள் எவை எவை? வானிலை ஆய்வு மையம்
- நித்தியானந்தாவின் கைலாசா அழைப்பு: "இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்"
- 2020- ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்: ’’இதுவரை இல்லாத வேலையிழப்புகள்’’
- ’’சொத்துக் குவிப்பு வழக்கு ‘...’சுதாகரனை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
தங்கமே..!! இப்படியே போனா எப்படி.... மீண்டும் 40 ஆயிரமா??
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் மீண்டும் விலை ஏற்றம் காண தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை ஏற்றம் கண்டுள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37,808க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,726க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
