வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:30 IST)

எங்க கேப்டனை எப்படி அப்படி சொல்லலாம்! – அதிமுக பிரமுகருக்கு தேமுதிக கண்டனம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அதிமுக பிரமுகர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக எம்ஜிஆரை பல கட்சிகள் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் “கருப்பு எம்ஜிஆர் என ஒருவர் கூறிக்கொண்டிருந்தார். அவர் காணாமலே போய்விட்டார்” என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் கட்சி தலைவர் விஜயகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய செல்வராஜை கண்டித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளான அதிமுக – தேமுதிக இடையேயான இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.