வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:42 IST)

சவரன் ரூ.50,000: ஆச்சர்ய பட வேண்டாம், தங்கத்துக்கு டிமேண்ட் அப்படி!!

நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.    
 
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை ஆனது. அதேபோல 1 கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,324க்கு விற்பனை அனது. 
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.42,808க்கு விற்பனை ஆகிறது. அதாவது கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.5,351க்கு விற்பனை ஆகி வருகிறது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு சவ்ரன் தங்கம் இன்னும் சில வாரங்களில் ரூ.50,000 என செய்தி வந்தாலும் அச்சர்யப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் மற்ற முதலீடுகளை விட தங்கத்தின் மீதான முதலீடுகள் பாதுகாப்பு தன்மை கருது அதிகரித்திருப்பதால் தங்கத்தின் விலை இன்னும் உயர்ந்துக்கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.