சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு அமல்!
ஊரடங்கு முடிவும் வரை சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலுக்கு வந்தது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் மீத அனைத்தும் அதாவது காய்கற், மளிகை, கறிக்கடை, டாஸ்மாக் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அந்த வகையில் சென்னையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.