1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona cases decrease in Chennai

கொரோனா ஃப்ரீ சிட்டியாக மாறும் சென்னை...!

#CoronaVirus
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என  தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 263,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
இதில் சென்னையில் மட்டும் 1,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,000த்திற்கு கீழ் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 1,02,985 பேரில் 88,826 பேர் குணமடைந்துள்ளனர். விரைவில் 12,000 என்ற இந்த எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு சென்னையில் கொரோனா முற்றிலுமாக குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்: வணிகர் சங்கம் தடாலடி!