1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai hits 50,000 corona cases

சென்னையில் 50,000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு!

#CoronaVirus
சென்னையில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. மண்டல வாரியாக பாதிப்பு விவரம் இதோ... 
 
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 3 ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3,713 தாண்டியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,000 தாண்டியுள்ளது. ஆம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. 
 
அதில் சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது.  
 
சென்னை 15 மண்டலத்தில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,455, தண்டையார்பேட்டையில் 6,221, தேனாம்பேட்டையில் 5,758, அண்ணா நகரில் 5,506, கோடம்பாக்கத்தில் 5,432, திரு.வி.க நகரில் 4,387, அடையாறில் 3,202, வளசரவாக்கத்தில் 2,310 ஆக பாதிப்பு உள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தூக்கம் இல்லையா? இத ட்ரை பண்ணுங்க..!!