1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate at rs 42,408 in Chennai

வரலாறு காணாத வகையில் ரூ.42,408-க்கு தங்கம் விற்பனை!

#GoldPrice
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.   
 
இந்நிலையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.41, 664க்கு விற்பனை ஆன நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனை ஆகிறது. 
அடுத்த கட்டுரையில்
இன்று இந்துக்களின் கனவு நிறைவேறுகிறது! – ஓபிஎஸ் வாழ்த்து!