1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. Today election result

இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை: களமிறங்கிய 1000க்கும் மேற்பட்ட முகவர்கள்

LokSabha Election Results 2019 Live
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பின் 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ முன்னணி நிலவரங்களை அறிவிக்கும். மேலும் மொபைல் செயலி மூலமும் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பாஜக சார்பில் 435 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 420 வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் இடங்களில் முகவர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். மற்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்தால் 1000க்கும் மேற்பட்ட முகவர்கள் களத்தில் தயாராக உள்ளனர். ஆனால் இந்த முறை  முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. 45 மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்: 'திமுக மற்றும் அதிமுகவின் கணக்குகள்' - எப்படி தாக்கம் செலுத்தும்?