ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (16:34 IST)

நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் தமிழிசை உறுதி

கடந்த 19ம் தேதி அனைத்து கட்ட பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடந்த நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

அதில் அவர் “தமிழ்நாட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிப்பது கடினம். மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன்” என பதிலளித்தார். உங்களுடைய வெற்றி வாய்ப்பு  எப்படி இருக்கிறது? என பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு “ நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.