1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anadakumar
Last Updated : புதன், 22 மே 2019 (19:58 IST)

கரூர் அருகே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு

கரூர் அருகே மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் எண்ணும் மையம் தீவிர கண்காணிப்பில் நாளை எண்ணப்படுவதையடுத்து ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மக்களவை தொகுதியின் வாக்குப்பெட்டிகளும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்குப்பெட்டிகளும் கரூர் அடுத்த தளவாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உரிய பாதுகாப்புகளுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் நாளை 23 ம் தேதி அந்த வாக்குப்பெட்டிகள் எண்ண உள்ள நிலையில் போலீஸார் தங்களது பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர். 
 
மேலும், கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய கரூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டம், வீராலிமலை தொகுதியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியும் வருவதாலும், மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலின் எண்ணிக்கையும் நடைபெற உள்ளதால் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.