1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
  4. Nanjil controversial speech on Kiran bedi

கிரண்பேடி ஆணா? பெண்ணா? சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்!

நாஞ்சில் சம்பத்
சற்றுகாலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் அரசியலில் நிழைந்து சர்ச்சையான வகையில் பேசியுள்ளார்.
 
புதுச்சேரியில்  காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் சம்பத்  இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர், இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்? என மிக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
ஒரு பெண்ணுக்கு எதிரான மிக இழிவான இந்த பேச்சை பலரும் கண்டித்துள்ளனர். சமீபத்தில் ராதாரவி நடிகை நயன்தாராவை மிக அருவருப்பான சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இப்போது நாஞ்சில் சம்பத் இப்படி பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே பேசி ராதாரவியும் சரி இப்போது பேசு நாஞ்சில் சம்பத்தும் சரி இருவருமே அரசியல்வாதிகள் ஆவர்.
அடுத்த கட்டுரையில்
ஃபேஸ்புக் காதலை நம்பி இலங்கையில் இருந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்