ஃபேஸ்புக் காதலை நம்பி இலங்கையில் இருந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (08:52 IST)
ஃபேஸ்புக் மூலம் காதல் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிந்த பொள்ளாச்சி சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் ஃபேஸ்புக் காதலால் ஒரு பெண் மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஃபேஸ்புக் மூலம் காதலித்து அதன்பின் அந்த காதலரை நேரில் பார்ப்பதற்காக
இலங்கையில் இருந்து ஒரு இளம்பெண் புறப்பட்டு தமிழகத்தை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி என்ற பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஃபேஸ்புக் மூலம் காதலித்தவரை அந்த பெண் பார்த்தாரா? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகள் இறந்த செய்தி அறிந்து இலங்கையில் இருந்த வந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதன் காரணத்தை அறியாமல் மகளின் உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :