மோடியை முதல்வராக்குவோம் ! பிரசாரத்தில் உளறிக் கொட்டிய ’பிரபல நடிகர் ’

kanja karuppu
Last Updated: வியாழன், 4 ஏப்ரல் 2019 (17:24 IST)
வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியில் நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். சில காமெடி நடிகர்களும் ஜெயலலிதா இருக்கும் பொழுதிலிருந்தே பேசி வருகின்றனர். தற்போதும் அது தொடர்கிறது. இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித்  தொண்டர்கள் மற்றும் பா.ம.க.வினரிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது. 
 
மேலும் மத்திய அரசு வழங்கிய திட்டங்களை மாநில அரசு செய்ததாகவும் கூறினார். பாஜவினர் மத்தியில் இவரது  பேச்சு அதிருப்தியை உண்டாக்கியது.
kanja karuppu

ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :