திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

பச்சை சுண்டைக்காய் குழம்பு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பச்சை சுண்டைக்காய் - 1 கப் 
புளி - எலுமிச்சைப்பழ அளவு 
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு 
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
 
தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் எடுத்து தனியே வைக்கவும். 
அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், புளிதண்ணீர், மஞ்சள் தூள்  சிறிது, உப்பு, அரைத்த தேங்காய் சேர்த்துச் வதக்கிய சுண்டக்காயும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்   . 
 
எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும்போது இறக்கவும். இதற்கு சிறிது எண்ணெய் அதிகம் தேவை. இந்தக் குழம்பு 3 நாட்கள் வரை கெடாமல்  இருக்கும்.