புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (18:32 IST)

அமேதி மக்களை ராகுல் அவமானப்படுத்தியுள்ளார் – ஸ்மிருதி ராணி தாக்குதல் !

வயநாட்டில் போட்டியிடுவதின் மூலம் ராகுல் காந்தி அமேதி வாக்காளர்களை ராகுல் காந்தி அவமானப்படுத்திவிட்டார் என்று பாஜகவின் ஸ்மிருதி ராணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையடுத்து இரண்டாவது தொகுதியாக போட்டியிடும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல்  செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார்.

முதல்முறையாக ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிருதி ராணி ‘ கடந்த 15 ஆண்டுகளாக அவரை வெற்றி பெற வைத்த மக்களை இழிவுபடுத்திவிட்டு ராகுல் வயநாட்டுக்கு மனுத்தாக்கலுக்கு சென்று விட்டார்.  அமேதி மக்கள் இந்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.