நான் ஜெயித்தால் யானை வாங்கித் தருகிறேன்: அதிமுக வேட்பாளர் பொளேர்!!!

ADMK
Last Modified செவ்வாய், 26 மார்ச் 2019 (12:26 IST)
மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றுவேன் என திருவண்ணாமலை நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.
 
நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி செங்கத்தில் நடைபெற்றது.
 
அப்போது கூட்டத்தில் பேசிய, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எனது சொந்த செலவில் திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலுக்கு யானை வாங்கிக் கொடுப்பேன். இரவு பகல் பாராமல் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுவேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :