வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (08:29 IST)

ஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை; சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதி!!!

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிகளை ஏகபோகமாக அள்ளி வீசியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யவும் பிரச்சாரத்திற்காகவும் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் திருப்பூர் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத்(55), தனது 15 தேர்தல் வாக்குறுதிகளை கூறியிருக்கிறார். அதில் முக்கியமானவைகள் சில
 
* அனைத்து பெண்களுக்கும் ரூ.25 ஆயிரம்  உதவித்தொகை
 
* ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி
 
* பெண்களுக்கு திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம்
 
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என போராடுவேன்
 
எனது  வாக்குறுதிகளை மக்களிடம் கூறி நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார். ஆனாலும் இந்த நபருக்கு ஓவர் கான்ஃபிடெண்ட் தான்...