இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி சென்று, பின்னர் மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பி வருவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மழை பெய்யும் என்றும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva