செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (09:42 IST)

கனிமொழிக்கு பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர்! பெரும் பரபரப்பு

பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஒரு பாஜக பிரமுகர் குறித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இதாவது பரவாயில்லை. ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள். ஆனால் அதிமுகவின் வேட்பாளர் ஒருவர் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது என்பது தெரிந்ததே. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக சின்னச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டதுடன் தூத்துகுடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் வாக்கு கேட்டு வருகிறார்
 
இந்த நிலையில் ஒரு இடத்தில் மட்டும் அவர் வாய்தவறி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார். பின் உடனே சுதாரித்து கொண்டு பாரத பிரதமரின் ஆசி பெற்ற தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்றார். ஒரு அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு வாய்தவறி வாக்கு கேட்ட சம்பவம் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது