வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (11:06 IST)

சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன்: காசா பணமா, அடிச்சு விடும் சுயேச்சை வேட்பாளர்!!!

நான் வெற்றி பெற்றால் சேலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என சேலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருக்கும் அகமது ஷாஜஹான் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று மிஸ்மில்லா மக்கள் கட்சியின் சுயேச்சை வேட்பாளர் அகமது ஷாஜஹான் தன் வேட்புமனுவை சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணியிடம் தாக்கல் செய்தார்.
 
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் எளிதில் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்றால் சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன். சேலம் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்வேன் என கூறினார்.