அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா?

Last Modified ஞாயிறு, 17 மார்ச் 2019 (21:21 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவின் முக்கிய தலைவரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் இயற்கை எய்திய காரணத்தால் பட்டியல் வெளியீடு நாளை என தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் அதிமுக வேட்பாளர் பட்டியல் ஒருசில ஊடகங்களுக்கு கசிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கசிந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

நாகை(தனி) - அசோகன்
மயிலாடுதுறை - பாரதி மோகன்
திருவள்ளூர்(தனி) - வேணுகோபால்
மதுரை - கோபாலகிருஷ்ணன்
நீலகிரி(தனி) - சரவணக்குமார்
திருநெல்வேலி - மனோஜ் பாண்டியன்.
காஞ்சிபுரம்(தனி) - மரகதம் குமரவேல்
தென் சென்னை - ஜெயவர்த்தன்
பொள்ளாச்சி - மகேந்திரன்
ஆரணி - ஆர்.வி.என்.கண்ணன்
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சிதம்பரம்(தனி) - சந்திரகாசி
பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி
தேனி - ரவீந்திரநாத்,
சேலம் - சரவணன்
நாமக்கல் - பி.ஆர்.சுந்தரம்
கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
ஈரோடு - செல்வகுமார் சின்னையன்
கரூர் - தம்பிதுரை
திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்

மேற்கண்ட பட்டியல் உண்மைதானா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :