தொடர்புடைய செய்திகள்
- மோடி வைத்த சஸ்பென்ஸ் ரிவீல்ட்! ஒட்டு மொத்த நாட்டுக்கே பெருமை!!!
- சாய்பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்!
- கமல் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு – திருமா வளவன் , கிருஷ்ணசாமி …?
- மோடி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் !
- ரஜினி - ஏ.ஆர். முருகதாஸ் பட ஷூட்டிங் தள்ளிப்போக இதுதான் காரணமா?
அதிமுகவினர் ஒத்துழைப்பு தருவதில்லை : தேமுதிக புலம்பல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் மெகாகூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் தேமுதிகவினருக்கு போதுமான ஒத்துழைப்பு தருவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குக் காட்டுக் அக்கறையைக்கூட வட சென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்குக் காட்டுவதில்லை என தேமுதிகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று தேமுதிகவினர் பெருதும் குறைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும், ஈபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவினர் அதிக அக்கரை காட்டாமல் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்குக் கவனம் செலுத்திவருவதாகவும் தேமுதிகவினர் தேர்தல் பார்வை குறித்து அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
