1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (14:15 IST)

சாய்பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்!

சாய்பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்!
கோலிவுட் திரையுலகில் ஒரு நட்சத்திரம் விவாகரத்து பெற்றால் உடனே அவருக்கு மறுதிருமணம் என்ற வதந்தியும் தானாக கிளம்பிவிடும். அந்த வகையில் இயக்குனர் விஜய் - நடிகை அமலாபால் ஜோடி விவகாரத்து பெற்றவுடன் நடிகர் விஷ்ணுவை அமலாபால் மறுதிருமணம் செய்யவிருப்பதாக வதந்திகள் பரவியது. அதற்கு விஷ்ணு விளக்கம் அளித்தவுடன் இந்த வதந்தி முடிவுக்கு வந்தது
 
இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய்க்கும் நடிகை சாய்பல்லவிக்கும் விரைவில் திருமணம் என ஒருசில ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் விஜய், 'சாய்பல்லவியும் தானும் நண்பர்களாக இருப்பதாகவும், இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறியுள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான 'தியா' படத்தில் நடிகை சாய்பலல்வி, 'தியா' நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சாய்பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்!
இந்த நிலையில் இயக்குனர் விஜய் தற்போது 'தேவி 2' மற்றும் 'வாட்ச்மேன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டு தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தின் பணியில் மூழ்கியுள்ளார்.