வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (12:00 IST)

தேர்தல் அறிக்கையில் முக்கிய திருத்தம்: அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கும் திமுக

திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்து பணிகளையும் முடித்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
 
இந்நிலையில் நேற்று வெளியான திமுகவின் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்து.
 
இதற்கிடையே இன்று திருவாரூரில் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஒப்புதலோடு தேர்தல் அறிக்கையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது என்னெவென்றால், அனைத்து விவசாயிகளின் வங்கிக்கடனும் ரத்து செய்யப்படும் என அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் 80000 கோடி விவசாயகடன் தள்ளுபடியாகும் என தெரிகிறது.