வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (09:17 IST)

திமுக தலைவர் ஆவார்… அழகிரி – ஜெயக்குமார் ஆருடம் !

திமுக மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்றும் அதன் பின்னர் திமுகவின் தலைவராக அழகிரி வருவார் என்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர். அப்போது ‘திமுக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் திமுக அறிக்கை அரைவேக்காட்டுத்தனமாகவும் உதவாக்கரையாகவும் உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக அறிவிப்போம் என அறிவித்தால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என துரோகம் செய்கிறார்கள். அது என்ன ஆட்சி மொழி… திமுக - காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற உணர்வு குற்ற உணர்வாய் அவர்களைக் குத்துவதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களின் மீது உண்மையானப் பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். அவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான தண்டனைப் பெற்று தருவோம்’ எனக் கூறினார்.

மேலும் மக்களவைத் தேர்தல் வெற்றி மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்து கேள்வியெழுப்பியபோது ‘திமுக படுதோல்வி அடையும் என்று மு.க.அழகிரியே கூறியுள்ளார். திமுக படுதோல்வியடைவது கண்டிப்பாக நடக்கும். அவ்வாறு நடக்கும்போது, அந்தக் கட்சியில் தலைவர் மாறி, மு.க.அழகிரி தலைவராவது உறுதி. கருத்துக் கணிப்புகள் பொதுவாக எடுபடாது. அவைகருத்து திணிப்புதான். மக்களிடம்தான் முடிவு உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.’ எனத் தெரிவித்துள்ளார்.