வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (18:43 IST)

வாஷ் அவுட்: பட்டும் திருந்தாத பாமக; வெற்றி முனைப்பில் திமுக?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் இரு பெரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தொகுதிகலை பங்கிட்டு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. 
 
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் 1, ஐஜேகே 1 என பங்கிடப்பட்டுள்ளது. இவர்களது தொகுதி பங்கீடு எவ்வித பிரச்னைகளும் இன்றி எளிதாகவே முடிந்தது.
ஆனால் அதிமுக கூட்டணிக்கு ஆரம்பம் முதலே கூட்டணி விவகாரத்தில் சிக்கல்கள் இருந்தன. ஒரு பெரிய போராட்டத்திற்குபின் அதிமுக கூட்டணியில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த முறை பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் திமுகவை எதிர்கொள்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மோதுகிறது. 
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை பாமக எதிர்கொள்கிறது. 2009 ஆம் ஆண்டு  நடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் திமுகவிடம் 5 தொகுதிகளையும், ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகளிடமும் பாமக இழந்தது. 
 
இதே சூழல் இப்போதும் உருவாகி உள்ளது. அந்த வரலாறு மீண்டும் திரும்புமா? அல்லது பாமக தமிழகத்தில் துளிர்க்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.