புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (21:29 IST)

நாடாளுமன்ற தேர்தல் நடத்த தயார்..! தேர்தல் தேதி எப்போது.? சத்யபிரதா சாகு முக்கிய தகவல்..!

sathyapradha
நாடாளுமன்ற தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

 
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்றத் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக கூறினார். மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றும் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.