வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (21:23 IST)

நாட்டிலேயே முதல்முறையாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்.! எந்த மாநிலத்தில் தெரியுமா..?

uthrakanth
நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றாகவே கருதுகின்றனர். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது.  நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜக தெரிவித்து வருகிறது.
 
இந்நிலையில் உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற ஆளும் பாஜக எம்.எல்.ஏக்களின் முழக்கங்களுடன் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

 
இதன் மீதான விவாதம் நடந்த நிலையில், உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பின் மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது சிவில் சட்டம் மசோதாவை நாட்டில் நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆகியுள்ளது.