வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (18:31 IST)

மக்களவை தேர்தல் எப்போது..? அண்ணாமலை சொன்ன அப்டேட் கரெக்டா இருக்குமா..?

annamalai
ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழுக்கள் அமைத்து 
தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை,  “பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். 

2019 போல இம்முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ளன என்றும் அவர் கூறினார்.

 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் அண்ணாமலை தெரிவித்தார்