வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (07:58 IST)

ஸ்பெயின் தொழிலதிபர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க சென்ற நிலையில் இன்றும் அவர் முதலீட்டாளர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ampo valves, ingeteam, gorlan உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்களை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பல முதலீட்டாளர்களை சந்தித்து, திப்பு - தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே சென்னையில் சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva