வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (15:43 IST)

பணம், பரிசை பொருள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை..! சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம்..! தலைமை தேர்தல் அதிகாரி...

sathyapradha
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மக்களவை தேர்தலுக்காக 1.7 லட்சம் வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 

93,000 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 99,000 விவிபேட் கருவிகளு தயாராக உள்ளன என்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளன என்றும் கூறினார்.
 
கூடுதலாக 20% அளவுக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர்,  வேட்பாளர்களின் அத்துமீறல்களை பொதுமக்கள் கண்காணித்து உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்
 
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம் என்றும் புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். 


மேலும் வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.