வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:50 IST)

தமிழ்நாட்டில் புதன் கிழமையில் தேர்தல்?

Election Commission
தமிழ்நாட்டில் புதன் கிழமையில் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாகத் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
விரைவில்   நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
 
அனைத்து தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
 
இந்த நிலையில்,  சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்குப் பிறகு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
 
தமிழ் நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22-29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் புதன் கிழமையில் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாகத் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் இன்று  தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளதாவது:
 
புதன் கிழமையில் தேர்தல் நடத்துமாறும், வார இறுதி நாட்களிலோ, வார தொடக்க  நாளிலோ வாக்குப்பதிவை நடத்த வேண்டாம் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாக  தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழ் நாட்டில் ஜூன் வரையிலான அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக்கள் மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.