செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:33 IST)

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை.! சத்யபிரதா சாகு தகவல்..!!

sathyapradha
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவ படை தமிழகம் வருகிறது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலையொட்டி கடந்த வாரம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்றார். மேலும் தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
 
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவ படை தமிழகம் வருகிறது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

 
முதற்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் 40 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வர உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.