1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (15:27 IST)

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

India Match
இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், அஸ்வினின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி தனது முதல்  இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
 
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை பறி கொடுத்தனர்.

அந்த அணியின் துவக்க வீரர் சாக் கிராலி நிதானமாக விளையாடி 50 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்
 
இந்திய அணி வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் நான்கு விக்கெட்டைகளை கைப்பற்றி அசத்தினார்.


இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாக் கிராலி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதை எடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.