திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (17:26 IST)

செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்..! சீமான் பேட்டி...

Seeman
மக்களவைத் தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
சென்னை தலைமை செயலகத்தில்,  சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழ்நாட்டில் 7 விழுக்காடு ஓட்டு வாங்கியிருக்கும் போது எனக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும் என்றார். முன்னுரிமை அடிப்படையில் விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
 
துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன் என்றும் எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


நான் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன் அதை ஒட்டி அதையொட்டி சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.