தொடர்புடைய செய்திகள்
- கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!
- கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார்!
- முதலாவதாக வந்து வாக்களித்த கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.
- திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்.. கோவையில் பரபரப்பு..!
- தேர்தலை புறக்கணிப்போம் - மலைக்கிராம மக்கள் அறிவிப்பு
வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் பணிகள் நிறைவடைந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது!
கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணியானது நடைபெற்றது.
இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் சீல் வைத்தார்.
மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
