1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police throw dmk man in coimbatore

திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்.. கோவையில் பரபரப்பு..!

திமுக
கோவையில் திமுக நிர்வாகியை காவல்துறையினர் தூக்கி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகின்றனர் 
 
இந்த தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் பூத் ஸ்லிப் வழங்கும் இடத்தில் திமுக நிர்வாகியை போலீசார் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கோவை பிஎன் புதூர் என்ற பகுதியில் கூட்டம் கூடாதென போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதனை அடுத்து அங்கு இருந்த நிர்வாகிகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது திமுக நிர்வாகி திடீரென மறியல் செய்தார் 
 
இதனை அடுத்து அந்த நிர்வாகியை போலீசார் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நிர்வாகியை தூக்கி வீசிய காவல்துறையினரை கண்டித்து அங்கு திமுகவினர் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திமுக நிர்வாகியை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வீசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு.. பகல் 1 மணி நிலவரப்படி எவ்வளவு?