1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:58 IST)

ஜனநாயக கடமையாற்றிய நடிகர் ரஜினிகாந்த்..! அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வலியுறுத்தல்..!!

Rajini
மக்களவை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.  வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில்  சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும் , கௌரவமும் இருக்கிறது என்றும் நான் ஓட்டு போடவில்லை என்று கூறுவதில் எந்த மரியாதையும் இல்லை இந்த கௌவுரவமும் இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.