ஜனநாயக கடமையாற்றிய ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சரத்குமார்.. வைரல் புகைப்படங்கள்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ்நாட்டில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணியிலிருந்து வாக்களிக்க பொதுமக்கள் வரிசையில் நின்று வருகின்றனர் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்களும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் காலை 7 மணிக்கு முன்பே வரிசையில் நின்று திருவான்மியூர் வாக்கு சாவடியில் நடிகர் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை அளித்த நிலையில் ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
நடிகர் கார்த்திக் தன்னது மகன் கௌதம் கார்த்திக் உடன் வாக்களித்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார். மேலும் பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர் என்பதும் இன்னும் சில நிமிடங்களில் நடிகர் விஜய் வாக்களிக்க வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Edited by Siva