துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி மாறமாட்டார் – கேப்டனுக்கு பில்டப் கொடுத்த மகன் !

Last Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:36 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது தந்தை விஜயகாந்தை பற்றி புகழ்ந்து பேசி விஜயபிரபாகரன் வாக்கு சேகரித்து வருகிறார்.

விஜயகாந்தின் உடல்நிலைக் காரணமாக அவர் இந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஆனால் அவருக்குப் பதிலாக விஜயகாந்த் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து செய்து வரும் வேளையில் அவரது மகனான விஜயபிரபாகரனும் களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அழகர்சாமியை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது ‘தேர்தலின் போது கூட்டணி என்பது வரும், போகும். ஆனால் விஜயகாந்தின் தோரணை என்றுமே மாறாது.மத்தியில் ஆட்சி தொடர்ந்தால் தான் மாநிலத்தில் ஆட்சி தொடரும். இந்த ஆட்சியில் ரவுடிசம் இல்லாமல் உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் எத்தனை ரவுடிகள் இருந்தார்கள். துளசி கூட வாசம் மாறும். ஆனால் தவசி வார்த்தை மாறமாட்டார்.’ என விஜயகாந்த் பட வசனத்தைப் பேசினார். இதைக் கேட்ட தொண்டர்கள் கைதட்டி விஜய பிரபாகரனின் பேச்சை ரசித்தனர்.இதில் மேலும் படிக்கவும் :