வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By C.ANANDAKUMAR
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (17:39 IST)

கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க அதை கெடுக்கின்ற தி.மு.க - தம்பித்துரை அதிரடி

கரூர் மக்களவை அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை, கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகோதூர், எஸ்.கே.டி மஹால், திருக்காம்புலியூர் மந்தை, இராமானுஜம் நகர், மகாத்மா காந்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த வெளி ஜீப்பில் கொளுத்தும் வெயிலையும் பாராமல், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க வேட்பாளர், தம்பித்துரை, பொதுமக்களுக்கும், ஏழை மக்களுக்கும் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருவது தான் ஜெயலலிதாவின் வழியிலான அ.தி.மு.க கட்சி, அந்த திட்டங்களை எல்லாம் கெடுப்பது தான் தி.மு.க கட்சி என்றும், ஆகவே, ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் ரூ 2 ஆயிரம் வழங்கும் திட்டம், பொங்கலுக்கு ரூ ஆயிரம் என்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரும் நிலையில், அதை எல்லாம் தி.மு.க வினர் கோர்ட்டிற்கு சென்று ஏழை மக்களுக்கு கொடுக்காமல் தட்டி கழித்து வருகின்றனர். 
 
ஆகவே மக்கள், பல்வேறு நல்ல திட்டங்களை கொடுக்கின்ற அ.தி.மு.க கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும், அதை கெடுக்கின்ற கட்சியான தி.மு.க கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதோடு, மறவாதீர்கள், இரட்டை இலை சின்னம் என்றார். 
 
வாக்கு சேகரிப்பின் போது, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அ.தி.மு.க நிர்வாகிகளும் இருந்தனர். வழி நெடுகிலும் வேட்பாளர் தம்பித்துரைக்கும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கும் ஆரத்திகளும், பூரண கும்ப மரியாதைகளும் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.