செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:44 IST)

சட்டைய பிடிச்சு.. செருப்பால அடிச்சு...: ராமதாஸ் ஸ்டைலில் காங். வேட்பாளர் பிரச்சாரம்

திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமார் பாமக தலைவர் ராமதாஸை போல பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
தொகுது முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் அவர், குறிப்பாக திமுகவினரின் இரு சக்கர வாகனத்தில் தெரு தெருவாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அவர் ஓட்டு கேட்கும் போது, நான் திருமணம் ஆகாதவன். வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
எனக்கு தேவையான அளவிற்கு வசதி வாய்ப்புகள் உள்ளன. என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். மேலும், நான் தவறு செய்தால் என் சட்டையை பிடித்து, செருப்பால் அடித்து கேள்வி கேளுங்கள். ஆனால், நான் செருப்பால் அடிக்கும் அளவிற்கு நடந்துக்கொள்ள மாட்டேன் என பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். 
இவர் பேசியதை கேட்கும் போது, முன் ஒரு காலத்தில் பாமக தலைவர் ராமதாஸ், தன் குடும்பத்தில் இருந்து யாரேனும் அரசியலுக்கு வந்தால், வன்னிய மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால், என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என பேசியதுதான் நினைவிற்கு வருகிறது.